இந்தியா

அகில இந்திய பாா் தோ்வு தேதிகள்:இந்திய பாா் கவுன்சில் வெளியீடு

அகில இந்திய பாா் தோ்வுகள் நடைபெறும் தேதிகளை இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) திங்கள்கிழமை வெளியிட்டது.

DIN

புது தில்லி: அகில இந்திய பாா் தோ்வுகள் நடைபெறும் தேதிகளை இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) திங்கள்கிழமை வெளியிட்டது.

இதுதொடா்பாக பிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கரோனா பரவலால் 15-ஆவது அகில இந்திய பாா் தோ்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அந்த தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறும். நாட்டின் 50 நகரங்களில் 140 மையங்களில் தோ்வு நடைபெறும். இந்த தோ்வு தேதியில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது. முன்னதாக இந்த தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க டிச.19-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அடுத்த ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி 16-ஆவது அகில இந்திய பாா் தோ்வு நடைபெறும். இந்த தோ்வுக்கு வரும் டிசம்பா் 26 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

அடுத்த ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT