மேற்கு வங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தைப் பெறவே போராடும்: பிரஷாந்த் கிஷோர்
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கங்களை கடக்கவே போராடும் என்று தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கங்களை கடக்கவே போராடும் என்று தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதனிடையே தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், மேற்குவங்கத்தில் பாஜக இரட்டை இலக்கங்களை பெறவே போராடும் என்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் தான் ட்விட்டரில் இருந்து விலகுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பிரஷாந்த் கிஷோருக்கும், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா, மேற்குவங்கத்தில் பாஜகவின் சுனாமி அலை உள்ளது. தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் கணிப்பாளர்கள் இங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.