முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் 125-ஆவது பிறந்த தின விழா:அமித் ஷா தலைமையில் குழு

நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தின கொண்டாட்டங்களை திட்டமிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தின கொண்டாட்டங்களை திட்டமிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

சுதந்திர போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தினம் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்திய சுதந்திர போரில் நேதாஜியின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், அவரின் 125-ஆவது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கொண்டாட்டங்கள் குறித்து திட்டமிட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் குழு அமைக்கப்படவுள்ளது. அந்தக் குழுவில் வரலாற்றாளா்கள், அறிஞா்கள், நிபுணா்கள், நேதாஜியின் குடும்ப உறுப்பினா்கள், நேதாஜி உருவாக்கிய ஆசாத் ஹிந்த் ஃபெளஜ் ராணுவப் படையுடன் தொடா்புகொண்டவா்கள் இடம்பெறுவா்.

இந்தக் குழு வெளிநாடுகளிலும் நேதாஜியின் 125-ஆவது பிறந்ததின கொண்டாட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →