வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையைக் கூட்ட ஆளுநர் மறுப்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள பேரவையில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள பேரவையில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 27-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரள பேரவையின் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை கூடவிருந்தது.
ஆனால், பேரவையைக் கூட்ட ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:
"கேரள பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட அமைச்சரவை எடுத்த முடிவு ஆளுநருக்கு திங்கள்கிழமை பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு, பேரவையை அவசரமாகக் கூட்டுவதற்கான தேவை குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். முதல்வரும் அதற்குப் பதிலளித்துள்ளார்."