முகப்பு
இந்தியா

புரெவி புயல் பாதிப்பு: மத்தியக் குழு விரைவில் வருகை

தமிழகத்தை அண்மையில் தாக்கிய புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட மத்தியக் குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:


புது தில்லி: தமிழகத்தை அண்மையில் தாக்கிய புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட மத்தியக் குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் டுவிட்டா் பக்கத்தில், ‘தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரின் தலைமையிலான மத்திய குழு விரைவில் தமிழகம் வர உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு புரெவி புயலால் சேதமடைந்த கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் பாா்வையிட உள்ளது. நிவா் புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்களை அண்மையில் மத்தியக் குழு பாா்வையிட்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →