அறுபதிலிருந்து இருபது வரை...
டி20 உலகக் கோப்பையை 2024, 2026 அடுத்தடுத்துவென்ற ஒரேநாடு இந்தியா என்பது நம் அனைவருக்கும் பெருமை.
இளமையே உன்னை வந்தனம் செய்கிறேன் என்றார் ஷேக்ஸ்பியர். நடைபெற்று முடிந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும்போது, அப்படித்தான் எல்லோருக்கும் தோன்றியிருக்கும். இளம் விளையாட்டு வீரர்கள் வேகமாக வரும் பந்தை எப்படி யெல்லாம் அடிக்கிறார்கள். புதிய உத்திகளைக் கையாண்டு மலைக்க வைக்கும் வகையில்விளையாடி அசர வைக்கிறார்கள்!
சிரிக்கெட் விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது, மேல் தட்டு மக்கள் பங்கேற்கும் விளையாட்டு, கால்பந்து ஹாக்கி, வாலியால், தடகளப் போட்டிகள் போன்ற விளையாட்டு களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று நாம் விவாதித்தாலும், இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் உயரிய இடம் பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில்தான் இந்த விளையாட்டு பிரபலம். அந்த நாடுகளுக்கு இடையே ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் 50 ஓவர் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, விதிகளைச் சீரமைப்பது போட்டிகளுக்கு நடுவர்களை நியமிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் பல நாடுகளுக்கும் கிரிக்கெட் சென்றடைந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான். அயர்லாந்து, ஜிம்பாப்வே நாடுகளும் இணைந்துள்ளன. நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்கள் இந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தியதன் விளைவாக அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து நாடுகளிலும் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது. அந்த நாடுகளின் அணிகளில் குடியேறிய இந்தியர்களும் அங்கம் வகிக்கிறார்கள். நியூஸிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறியரைப்போல 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் தரமுள்ள பத்து அணிகளை உருவாக்கலாம்.
அவசர உலகில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விளையாட்டைப் பார்ப்பதற்கு அவகாசம் எங்கிருக்கிறது' தனி மனித பொறுமைக்கும் ஒரு வரம்புள்ளது அல்லவா? இதை மனதில் கொண்டுதான் ஒருநாள் கிரிக்கெட் தொடங்கப்பட்டது.
ஒருநாள் கிரிக்கெட்டுக்கு காரணகர்த்தா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் கெர்ரி பேக்கர்' என்ற தனவான். சேனல் 9 என்ற பெயரில் விளையாட்டுகளுக்கான பிரத்யேக தொலைக்காட்சி சேனல் அவரது முயற்சியால் நிறுவப்பட் டது. 1970-களில் அவரதுதொலைக்காட்சி நிறுவனத்துக்கு டெஸ்ட் போட்டிகளைக்காட்சிப்படுத்தும் உரிமை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்கவில்லை. இதை சவாலாக ஏற்று ஒரு புதிய கிரிக்கெட் போட்டியை பகல்-இரவு மற்றும் குறைந்த ஓவர்கள் கொண்ட ஆட்டமாக தொடங்கினார். சிவப்புப் பந்துக்குப் பதிலாக வெள்ளைப் பந்து, அணி வீரர்களுக்கு வெள்ளைச் சீருடைக்குப் பதிலாக வெவ்வேறு நிற உடைகள், விளையாட்டு வீரர்களைக் கவர அதிக பரிசு என்று அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். பணம் புரள ஆரம்பித்தவுடன் வீரர்களும் கெர்ரி பேக்கர் பக்கம் சாய்ந்தார்கள். குறைந்த வருமானமே பெற்றிருந்த வீரர்களுக்கு அவர்களது திறமைக்கு ஏற்ப பணம் குவிந்தது. கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றி மிகப் பெரிய வணிகச்சத்தை உருவானது.
தலைமை கிரிக்கெட் வாரியத்துக்கு கெர்ரிபேக்கர் தொடுத்த எதிர்மறை வளர்ச்சியை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. பல பழங்காலத்து ரசிகர்களின் ஆதரவில்லாமல் எந்த ஒரு விளையாட்டும் சிறக்க முடியாது. இந்தியாவில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டுகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் என்ற அமைப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கியது.
வாரியத் தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கிரிக்கெட்டின் புனிதத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதில் கேளிக்கை அடிப்படையிலான வேறு எந்த மாறுதலும் விளையாட்டையே அழித்து விடும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.
காலப்போக்கில் மாற்றம்தான் மாறாதது என்ற முதுமொழிக்கேற்ப புதிய ஏற்பாட்டை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் வர்த்தகம் ஈட்டக்கூடிய பெரும் பணப்புழக்கம் எல்லோரையும் படிய வைத்தது. கெர்ரி பேக்கரின் கிரிக்கெட் வர்த்தகப் புரட்சி வெற்றி பெற்றது. கிரிக்கெட் வாரியம் போட்டி நடத்தப்படும் மையங்கள், விளையாட்டு வீரர்கள், நடுவர்கள், ஊடகங்கள், சுற்றுலாத் தலங்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பொருளாதார வளர்ச்சி உறுதியானது.
1975 முதல் 60 ஓவர் என்ற அடிப்படையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற தொடங்கின. 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது. எதிரணிகளை லாய்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய இந்திய அணி 54 ஓவர்களில் 183 ரன் கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவு கள் அணி 140 ரன்களில் கருண்டது. முதல் முறையாக உல சக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி 60 ஓவர்கள் ஆசிய தட்பவெப்பநிலைக்கு சரிவராது என்று அந்தப் போட்டிகள் இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவில்தான் நடத்த வேண்டும் என்று அந்த இருநாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சால்வே ஆசிய நாடுகளின் ஆதரவுடன் நான்கு ஆண்டுகள் போராடி ஆசிய நாடுகளில் போட்டி நடத்த இடையூறாக இருந்த 60 ஓவர்கள் என்பதை 50 ஓவர்களாக மாற்றினார். அரசியல்வாதியான சால்வே தனது அரசியல் சாணக்கிய திறமையைக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளை இணங்கவைத்து, வாக்கெடுப்பில் 16/12 என்ற வித்தியாசத்தில் இந்தியாவின் விதிகள் மாற்றத்தை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொருளாதார வலிமை லண்டனிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தது.
ரசிகர்களின் ஆதரவில்லாமல் எந்த ஒரு விளையாட்டும் சிறக்க முடியாது. இந்தியாவில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டுகிறது. இந்தியன் பிரீமியர் லீக் என்றபோட்டியை இந்திய கிரிக்கெட்வாரி யம் உருவாக்கியது. 20 ஓவர்கள் கொண்ட இந்தப்போட்டிகள் மூன்றரை மணிநேரத் தில் முடிந்து விடும். ஒரு நீண்ட திரைப் படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.
2003-இல் இங்கிலாந்து உள்ளூர் அணி களுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டி பல நாடுகளுக்கும் விரிவடைந் தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரமும்கிடைத்தது.
2008-லிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் ரசிகர் களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டிகளில் வெளி நாட்டு வீரர்கள் மட்டுமின்றி உள்ளூர் வீரர்களுக்கும் முக்கிய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தால், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக் கிறது. உதாரணமாக, 2025 ஐபிஎல் போட்டி யில் தில்லி அணிக்காக விளையாட சேலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு ரூ. 10.75 கோடி வழங்கப் பட்டது. இவ்வாறு பல உள்ளூர் விளை யாட்டு வீரர்கள் பயனடைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
1983-இல் நடைபெற்ற 60 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் சில அணிகளே 200 ரன்கள் எடுத்தன. ஆனால், இப்போது இருபது ஓவர்போட்டிகளிலேயே200-க்கும் அதிகமானான்களை பல அணிகளும்குவிக் கின்றன. அதிக ரன்களை எடுக்க வேண் டுமென்றால் அதிகபட்சமாக ஒரு பந்தில் ஆறு ரன் எடுத்தால்தான் ரன்களைக் குவிக்க முடியும். திறமையான பேட்டர்களும் சிக்ஸர் அடிப்பதற்கு நல்ல பயிற்சி எடுத்து மைதானத்தில் விளாசுகிறார்கள். இதை ஒரு கலையாக முதலில் உருவாக்கியவர்கள் மேற் கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிறிஸ் செய்ல் இலங்கையை சேர்ந்த ஜெயசூர்யா, இந்தியாவின் யுவராஜ் சிங், பந்து மட்டையிலிருந்து உயர அடிக்கப்பட்டு மைதான எல்லையைத் தாண்டும் போது, ரசிகர் களுக்கு உச்சாட்டபரவசமளிக்கும்.
எந்த வெற்றியும் உழைப்பில்லாமல் வராது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் நடைபெற்று முடிந்த டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் எதிரணிகளின் பந்து வீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து வெற்றியை உறுதிசெய்தார். மீனவ குடும் பந்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இளம் வயதில் காலை ஐந்து மணிக்கு பேருந்தில் மைதானத்துக்குச் சென்று கடும் பயிற்சி மேற்கொண்டு, அங்கேயே குழாயடியில் குளித்து பள்ளிக்குச்சென்று படிப்பு என்று இடைவிடாமல் அர்ப்பணிப்புடன் ஈடுபட் டதால்சிகரத்தை எட்ட முடித்தது.
அகமதாபாதில் நியூஸிலாந்து அணியு டன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூ ஸிலாந்து அணிதான் வெற்றி பெறும் என் றும் பேசப்பட்டது. அதை முறியடித்து வீழ்வேன் என நினைத்தாயோ' என்று இந் திய அணி முனைப்புகாட்டி வென்றது. டி20 உலகக் கோப்பையை 2024, 2026 அடுத்தடுத்துவென்ற ஒரேநாடு இந்தியா என்பது நம் அனைவருக்கும் பெருமை.
கட்டுரையாளர்:
முன்னாள் காவல் துறைத் தலைவர்.