யார் இந்த சரண்ஷ்? இந்திய டெஸ்ட் அணியில் 33 வயது ஆல்ரவுண்டர்!
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 33 வயது ஆல்ரவுண்டர் சரண்ஷ் ஜெயினை பற்றி...
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் 33 வயதான ஆல்ரவுண்டருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது போட்டி ஆக. 15 ஆம் தேதியும், ஆக. 23-ல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகின்றன. போட்டிக்கு முன்னதாக, ஆக. 7 ஆம் தேதி பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கிறது.
இந்தத் தொடருக்கு ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்திய அணியில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி அறிவிக்கப்பட்டதும் யார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் எழுந்திருக்கின்றன.
யார் இந்த சரண்ஷ் ஜெயின்?
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 2014 முதல் விளையாடி வருகிறார் சரண்ஷ் ஜெயின். சமீபத்தில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த சரண்ஷ் ஜெயின், இரண்டு போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, 70 ரன்கள் எடுத்திருந்ததன் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வாஷிங்டன் சுந்தர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டரான சரண்ஷூக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து குணமடைந்து வரும் சூழலில், சரண்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
இந்தூரில் பிறந்த ஜெயின், 2014-15 சீசனில் மத்தியப் பிரதேச அணிக்காக தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். 54 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2,000 ரன்கள் குவித்து, 188 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயினின் தந்தை சுபோத் ஜெயினும் ரஞ்சி டிராபியில் மத்தியப் பிரதேச அணியில் விளையாடியுள்ளார். காலேயில் நடைபெறும் போட்டியில் சரண்ஷ் ஜெயின் அறிமுகமானால், 2021-ஆம் ஆண்டில் பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் இந்தியாவின் முதல் ஸ்பெஷல் ஆஃப்-ஸ்பின்னர் என்ற பெருமையை பெறுவார்.
இவர் 2021 - 2022 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் மத்தியப் பிரதேச அணி கோப்பையை வெல்வதற்கு பெரிதும் பங்காற்றினார். 2022-23 ரஞ்சி டிராபியின் போது, ஜெயின் 360 ரன்கள் குவித்து 35 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும், சிறந்த ஆல்-ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருதைப் பெற்றார். 2025 துலீப் கோப்பையிலும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி கோப்பையையும் வென்று, தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அணி விவரம்
ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (வி. கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின்
India have rewarded years of domestic excellence by handing Saransh Jain his maiden Test call-up at the age of 33. Here's everything you need to know about the Madhya Pradesh all-rounder and the journey that brought him to the national team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.