உ.பி. உர ஆலையில் எரிவாயு கசிவு: 2 பேர் பலி, 15 பேர் காயம்
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக இருவர் பலியானார்.
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக இருவர் பலியானார்.
பூல்பூரில் உள்ள இந்திய உழவர் உர கூட்டுறவு (IFFCO) ஆலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும 15 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலையின் ஒருபக்கம் மூடப்பட்டு, தற்போது எரிவாயு கசிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அதோடு, நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், விபத்து குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.