முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,913 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,913 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,913 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,06,371 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் மேலும் 7,620 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 93 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 48,969 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 18,01,700 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் இன்னும் 54,573 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 745 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,88,561 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,033 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →