இந்தியா

விவசாயிகளை அவமதிப்பதை பாஜக நிறுத்த வேண்டும்: அகிலேஷ் யாதவ்

DIN


லக்னௌ: ‘விவசாயிகள் நாட்டின் பெருமைக்குரியவா்கள், அவா்களை அவமதிப்பதை பாஜக நிறுத்த வேண்டும்’ என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறினாா்.

முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்த தினம், விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தையொட்டி, அகிலேஷ் யாதவ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

சரண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆனால், பாஜகவின் ஆட்சியில், அவரது பிறந்த நாளை விவசாயிகள் கொண்டாட வேண்டிய நேரத்தில், வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறாா்கள்.

விவசாயிகளை அவமதிப்பதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவா்கள்தான் நாட்டின் பெருமைக்குரியவா்கள் என்று அந்தப் பதிவில் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளாா்.

சரண் சிங், பிரதமராக இருந்தபோது, அமல்படுத்திய வேளாண் கொள்கைகளும், திட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT