இந்தியா

விவசாயிகளின் நலன்களை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சஞ்சய் ரெளத் குற்றச்சாட்டு

DIN

மும்பை: நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலன்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக சிவசேனை கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினமான சஞ்சய் ரெளத் குற்றஞ்சாட்டினார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தில்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதிமுதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் ரெளத் புதன்கிழமை கூறியதாவது: 
விவசாயிகள் இந்நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அவர்கள் தில்லியின் எல்லைப் பகுதிகளில் மட்டுமன்றி பிற இடங்களிலும்  போராட்டத்தில் ஈடுபட்
டுள்ளனர்.
ஆனால், சில தொழிலதிபர்கள் பயனடைவதற்காக விவசாயிகளை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 
போராட்டம் நடத்திவரும் நிலையில் தேசிய விவசாயிகள் தினம் ஒரு கருப்பு நாள் ஆகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT