விவசாயிகளின் போராட்டத்திற்கு திரிணமூல் துணை நிற்கும்: மம்தா
விவசாயிகளின் போராட்டத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிவசாயிகளின் போராட்டத்திற்கு திரிணமூல் துணை நிற்கும்: மம்தா
விவசாயிகளின் போராட்டத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடி அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
தில்லியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுக்கும் வகையில், கடந்த திங்கள் கிழமை மேற்குவங்கத்திலிருந்து 5 பேர் அடங்கிய குழு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனிடையே விவசாயிகள் தினத்தையொட்டி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (செப்.23) விவசாயிகளுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது அவருடன் பேசிய விவசாயிகளின் சிலர் போராட்டத்தை பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்தனர்.
கடந்த மாதமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.