முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? ராகுல்காந்தி கேள்வி

உலகில் கரோனா தடுப்பூசி பல நாடுகளில் போடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி
பகிர்:

உலகில் கரோனா தடுப்பூசி பல நாடுகளில் போடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி தயாரிக்கும்பணி வேகமெடுத்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும் முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, உலகம் முழுவதும் இதுவரை 23 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் தொடங்கிவிட்டன. இந்தியாவில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மோடிஜி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →