இந்தியா

முகக்கவசம் அணிந்தாலும் முகபாவத்தை கண்டுபிடிக்கும் குழந்தைகள்

IANS


நியூ யார்க்: முகக்கவசம் அணிந்து கொண்டு எதிரே வருவர் யார் என்றே தெரியாமல் கடந்து செல்லும் சில மனிதர்களுக்கு மத்தியில், முகக்கவசம் அணிந்திருந்தாலும், ஒருவரின் முகபாவத்தை குழந்தைகள் சரியாகக் கண்டுபிடித்து விடுவார்களாம்.

பிஎல்ஓஎஸ் ஒன் என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், ஒருவர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அவரது கோபம், அழுகை, துக்கம் போன்ற எந்த முகப்பாவத்தையும், குழந்தைகள் எளிதாகக் கண்டுபிடித்து விடுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை பலரும் முகக்கவசம் அணிந்து கொண்டே உரையாற்றுவதால், குழந்தைகள் பலருக்கும் முகப்பானைகள் தெரியாமலே போய்விடுமோ என்று கவலை அடைந்திருந்தனர். 

எனவே அதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், முகக்கவசம் அல்லது கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தவர்களின் பல புகைப்படங்களைக் காட்டியபோது, 7 - 13 வயதுடைய 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்கள் கோபத்தில் இருக்கிறார்களா? கவலையில் அல்லது அச்சத்தில் இருக்கிறார்களா என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளது மேற்கோள் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள இல்லிநோய்ஸ் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT