இந்தியா

அரசின் பிடிவாதத்தால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது: கோபால் ராய்

DIN

அரசின் பிடிவாதத்தால் தில்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நீண்டுவருவதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, வேளாண் சட்டப் பிரச்னையில் அரசு சிக்கியுள்ளதாக உணர்கிறேன். அரசின் பிடிவாதத்தால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

எல்லையில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் காலிஸ்தான்கள், நக்சல்கள், தீவிரவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். 

விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் உக்தி இனியும் பலனளிக்காது என்று கூறினார்.

தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 29-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT