இந்தியா

ஜன. 1 முதல் வாகனங்களில் பாஸ்டேக் கட்டாயம்: கட்காரி

DIN

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

தில்லியில் காணொலி நிகழச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது, புத்தாண்டு முதல் நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்.
 
இதன் மூலம் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டணத்தை செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன்மூலம் நேரத்துடன் எரிபொருள் செலவும் சேமிக்கப்படுகிறது.

நான்கு வங்கிகளின் உதவியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு பாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு 7 லட்சம் பாஸ்டேக் வழங்கப்பட்டன. 2018-ஆம் ஆண்டு இது 34 லட்சமாக அதிகரித்தது.

தற்போது அனைத்து வாகனங்களுக்கும் அல்லது 2017 டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT