இந்தியா

பெங்களூருவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அனுமதி

DIN

கர்நாடகத்தில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவுக் கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக செப்டமர் 24 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை கர்நாடகத்தில் இரவு நேர முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கும் வகையில் பெங்களூருவில் மட்டும் முழு ஊரடங்கில் ஒருசில தளர்வுகளை மாநகர ஆணையர் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT