முகப்பு
இந்தியா

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி உறுதி

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

புது தில்லி: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, காங்கிரஸ் மாநிலத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்கத்தில் எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இருப்பினும், இவ்விரு கட்சிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் இணைந்து போட்டியிடவில்லை. இதேபோல், கேரளத்திலும் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவில்லை.

இந்நிலையில், மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு மாநில காங்கிரஸ் தலைமை விருப்பம் தெரிவித்தது. இதேபோல், இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்தன. இதையடுத்து, கூட்டணி முடிவு தொடா்பான அறிவிப்பை காங்கிரஸ் முறைப்படி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அடுத்த ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →