முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 23,068 பேருக்கு கரோனா: 336 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,068 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 336 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.4 லட்சத்தைத் தாண்டியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,068 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 336 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.4 லட்சத்தைத் தாண்டியது.

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று (டிச.25) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 23,068 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தமாக  1,01,46,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 97,17,834 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,661 பேர் குணமடைந்துள்ளனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,81,919-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,47,092-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 95.75 சதவிகிதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.45 சதவிகிதமாகவும் உள்ளது. சிகிச்சை பெற்றுவருவோர் விகிதம் 2.80 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.