அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்கள்: மத்திய அமைச்சர் கட்கரி அடிக்கல் நாட்டினார்
அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
இந்தியாஅசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்கள்: மத்திய அமைச்சர் கட்கரி அடிக்கல் நாட்டினார்
அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
அசாம் முதல்வர் சர்பானந்த் சோனோவால் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, தமது இதயத்தில் அசாமுக்கு சிறப்பான இடம் எப்போதுமே உண்டு என்று கூறினார்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்டத் திட்டங்களின் மூலம் 439 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். இதற்கான செலவு ரூ.2,366 கோடி ஆகும். அசாமின் வளர்ச்சிக்கு இந்தச் சாலைகள் வழிவகுக்கும்.
முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலையையும் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.