முகப்பு
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (கோப்புப்படம்)
இந்தியா

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ராகுல் தயாரா?: ஸ்மிருதி

ராகுல்காந்தி பொய்யுரைத்து விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ராகுல் தயாரா?: ஸ்மிருதி

ராகுல்காந்தி பொய்யுரைத்து விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (கோப்புப்படம்)
பகிர்:

ராகுல்காந்தி பொய்யுரைத்து விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், ராகுல் காந்தி குறித்து சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார்.

விவசாயிகள் முன்பு முதலைக் கண்ணீர் வடித்து, ராகுல்காந்தி உணர்வுப்பூர்வமாக அவர்களை தவறாக வழிநடத்துகிறார்.

விவசாயப் பிரச்னை குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்த ராகுல் காந்தி தயாரா என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகளின் போராட்டக் களத்திற்கு ராகுல் காந்தி வந்தால், விவசாயிகளுக்கு அவர்கள் செய்த துரோகங்கள் குறித்து விவரிப்பேன் என்று சவால் விடுத்தார்.

அமேதி தொகுதியில் என்னுடன் போட்டியிட்டு தோற்றவர், விவசாயிகள் குறித்து கவலைப்படுவதாக காட்டிக்கொள்கிறார். ஆனால் அவரே விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பவர் தான் என்று விமர்சித்தார்.

அமேதியில் விவசாயிகளின் முன்னேற்றத்தை முற்றிலுமாக முடக்கியவர்கள் முன்பு ஆட்சி செய்தவர்கள். மாளிகையில் இருந்துகொண்டு ஏழை விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →