முகப்பு
இந்தியா

கிறிஸ்துமஸ்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

Updated On : 25 டிசம்பர், 2020 at 12:02 PM
கோப்புப்படம்
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் தனது சுட்டுரை பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

"அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த திருவிழா அமைதியையும் செழிப்பையும் வளர்க்கிறது, சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவுகிறது என்று நம்புகிறேன். 

Advertisement

அன்பு, இரக்கம் மற்றும் தர்மம் பற்றிய கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவோம், நமது சமூகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக நம்மை அர்ப்பணிப்போம்" என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி, தனது சுட்டுரை பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தைத் தருகின்றன. 

அவருடைய பாதை ஒரு நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழியைக் காட்டட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும்" இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சுட்டுரையில் தெரிவித்துள்ளார். இந்த திருவிழா உங்கள் வீடுகளுக்கும் இதயங்களுக்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தட்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.