ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த சிலருக்கு கரோனா கண்டறியப்பட்டதையடுத்து, அவர் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்கலாமே.. ‘அண்ணாத்த’ படக்குழுவில் 4 பேருக்கு கரோனா: நடிகா் ரஜினிகாந்துக்கு நோய் பாதிப்பில்லை
ரஜினியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில். இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாள்களாக ஹைதராபாத்தில் உள்ள படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அந்த படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒரு சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. ‘அண்ணாத்த' படக்குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா, படப்பிடிப்பு நிறுத்தம்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
இதையடுத்து டிசம்பர் 22ம் தேதி ரஜினிகாந்துக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமுதலே, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிக்கலாமே.. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு: கரோனா பாதுகாப்பு வளையத்தில் படக்குழுவினர்!
நடிகர் ரஜினிகாந்துக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. ரத்த அழுத்த மாறுபாட்டைத் தவிர ரஜினிகாந்துக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. சோர்வு காரணமாக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்படுவார். ரத்த அழுத்தம் சரியானதும் மருத்துவமனயிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார். அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வு தவிர வேறு எந்த உடல்நலக் குறைபாடும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.