வேளாண் சட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்: ம.பி. முதல்வர் அறிவிப்பு
மத்தியப் பிரதேசத்தில் விரைவில் 3 வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்படும் எனவும் அதில் குழப்பம் எதுவும் இல்லை எனவும் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் விரைவில் 3 வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்படும் எனவும் அதில் குழப்பம் எதுவும் இல்லை எனவும் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதில் எந்த குழப்பமும் இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும் அவர் சனிக்கிழமை தெரிவித்தார். மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களை நன்கு புரிந்துகொண்டு பயன்பெற மாநில அரசு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வேளாண் சட்டங்களைக் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.