ஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் தொடக்கிவைப்பு
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
இந்தியாஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் தொடக்கிவைப்பு
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து மக்களுக்கும் உலகளாவிய மருத்துவ காப்பீட்டை உறுதி செய்யும் வகையிலும், தேவையான மற்றும் தரமான மருத்துவ சேவைகள் பெறுவதையும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் இத்திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.