கரோனா: கடந்த 24 ணி நேரத்தில் 22,273 பேருக்கு தொற்று; 251 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,273 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் வியாழக்கிழமை பாதிப்பை விட 3.4% குறைந்துள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,273 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் வியாழக்கிழமை பாதிப்பை விட 3.4 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மேலும் 22,273 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,01,69,118 -ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 251போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,47,343-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45 சதவீதமாகும்.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 22,274 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 97,40,108-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 95.78 சதவீதமாகும்.
சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 5-ஆவது நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,81,667 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.77 சதவீதமாகும்.
புதிதாக ஏற்பட்ட 22,273 பாதிப்புகளில் உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டித்தில் 3,431பேரும், 89 பேரும், அதைத் தொடா்ந்து, தில்லியில் 758 பேரும், கேரளம் 5,397 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி டிசம்பா் 25-ஆம் தேதி வரை 16,71,59,289 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,53,527 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.