முகப்பு
இந்தியா

பிரிட்டனிலிருந்து மகாராஷ்டிரம் திரும்பிய பெண்ணுக்கு கரோனா

இங்கிலாந்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், ஔரங்காபாத்திற்கு திரும்பிய பெண்ணுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
UK returnee tests COVID-19 positive in Maha's Aurangabad
பகிர்:

இங்கிலாந்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், ஔரங்காபாத்திற்கு திரும்பிய 
பெண்ணுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

நவம்பர் 25-க்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 44 பேரில் இந்த பெண்ணும் அடங்குவர். 

இங்கிலாந்திலிருந்து திரும்பிய 11 பேர் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அதில் ஒரு பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இருப்பினும், அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என்று ஔரங்காபாத் மாநகராட்சியின் சுகாதார அதிகாரி மருத்துவர் நீதா படல்கர் தெரிவித்தார். 

அவரது மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொற்று பாதித்த பெண் இங்கிலாந்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானாரா அல்லது ஔரங்காபாத்திற்கு வந்தபின்பு தொற்று பாதிக்கப்பட்டாரா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். 

மேலும், இங்கிலாந்திலிருந்து ஔரங்காபாத்திற்கு திரும்பிய மொத்தம் 44 பயணிகளின் பட்டியலை அதிகாரிகள் பெற்றுள்ளனர் என்று மாவட்ட அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

ஔரங்காபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரை மொத்தம் 45,289 பேர் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இறப்பு எண்ணிக்கை 1,196ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை, 43,552 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், மேலும்  541 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments