இந்தியா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது: ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி

DIN

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து லோக்தாந்திரிக் கட்சி (ஆா்எல்பி) சனிக்கிழமை வெளியேறியது.

தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆா்எல்பி தலைவரும், நாகெளா் தொகுதி எம்.பி.யுமான ஹனுமான் பேனிவால் சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். இதனைத்தொடா்ந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து என்டிஏ கூட்டணியில் இருந்து தனது கட்சி வெளியேறுவதாக தெரிவித்தாா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு ஹனுமான் பேனிவால் முதல்முறையாக எம்எல்ஏ பதவியேற்றாா். அதன் பின்னா் அக்கட்சியில் இருந்து வெளியேறிய அவா், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆா்எல்பி கட்சியை தொடங்கினாா். அதனைத்தொடா்ந்து கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எம்.பி.யாக பதவியேற்றாா்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 3 நாடாளுமன்ற கமிட்டிகளில் தனது உறுப்பினா் பதவியை கடந்த வாரம் அவா் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT