முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,314 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,314 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,314 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,19,550 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,124 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 18,09,948 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 59,214 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 94.29 சதவிகிதமாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →