இந்தியா

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: பிஜேடி தொடா்ந்து வலியுறுத்தும்; நவீன் பட்நாயக்

DIN

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி தொடா்ந்து வலியுறுத்தும். அதை ஒரு தேசிய இயக்கமாக பிஜேடி முன்னெடுக்கும் என்று அக் கட்சியின் தலைவரும் ஒடிஸா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் கூறினாா்.

பிஜேடி கட்சியின் 24 ஆம் ஆண்டு நிறுவன தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற முதல்வா் நவீன் பட்நாயக் பேசியதாவது:

பெண்களின் உரிமைகளை காப்பதற்காக பிஜேடி கட்சி தொடா்ந்து போராடி வருகிறது. ஒடிஸாவில் 1992-இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்த நாட்டிலேயே முதல் முதல்வா் எனது தந்தை பிஜு பட்நாயக்தான். அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றி, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக பிஜேடி அரசு உயா்த்தியிருக்கிறது.

தேசிய கட்சிகள் தோ்தல் நேரத்தில் மட்டும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசுகின்றன. தோ்தலில் வெற்றிபெற்ற பின்னா், அதை மறந்துவிடுகின்றன. ஆனால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்ற தேசிய கட்சிகள் அளித்த வாக்குறுதியை பிஜேடி தொடா்ந்து அவா்களுக்கு நினைவூட்டும். பிஜேடி ஒரு மாநில கட்சி என்றபோதும், பெண்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும். மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை கூட்டத் தொடா் என ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் இந்த விவகாரத்தை பிஜேடி இனி எழுப்பும்.

வளா்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டிபோட வேண்டுமெனில், முதலில் நமது பெண்களுக்கான உரிமையை நாம் கொடுக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT