நாகாலாந்தில் முதல் முறையாக புதிதாக கரோனா பாதிப்பு இல்லை
நாகாலாந்து மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மே 25-ம் தேதிக்குப் பிறகு டிசம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதால் முதல் முறையாக புதிய கரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை.
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மே 25-ம் தேதிக்குப் பிறகு டிசம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதால் முதல் முறையாக புதிய கரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை.
கரோனா பாதிப்பு தொடக்கம் முதலே குறைவாக இருந்த நாகாலாந்தில், கரோனாவிலிருந்து மீள்வோர் விகிதம் 96.14 சதவீதமாக இருந்தது. இதுவரை 23 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. கரோனா பணிகளுக்கு இதுவரை 7,544 கோடி செலவு: முதல்வர் பழனிசாமி
நாகாலாந்தில் இதுவரை 11,897 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 251 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாக்ரள். இதுவரை 11,438 பேர் குணமடைந்துள்ளனர். 78 பேர் பலியாகிவிட்டனர் என்று அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக சென்னையிலிருந்து திரும்பிய மூன்று பேருக்கு மே 25-ம் தேதி நாகாலாந்தில் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.