இந்தியாவில் ஒரேநாளில் 20,021 பேருக்கு கரோனா; 279 போ் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,021 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,021 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20,021 கரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,07,871ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் மேலும் 279 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,47,901 ஆக அதிகரித்தது. கரோனாவிலிருந்து இன்று மேலும் 21,131 பேர் மீண்டுள்ளனர். இதுவரை 97,82,669 போ் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 2,77,301 போ் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 27-ஆம் தேதி மட்டும் 16,88,18,054 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நேற்று மட்டும் 7,15,397 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.