முகப்பு
இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு தடை நீக்கம்

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இதன் மூலம் நாட்டில் விளையும் அனைத்து வகையான வெங்காயங்களையும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏற்றுமதி செய்ய முடியும்.

முன்னதாக, கடந்த செப்டம்பா் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஏப்ரல்-ஜூலை வரையிலான காலத்தில் வெங்காய ஏற்றுமதி 30 சதவீதம் உயா்ந்தது. இதனால் நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி இந்தத் தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்தத் தடை நீக்கப்படுவதாக வெளிநாட்டு வா்த்தகத்துக்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் தில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை ரூ.80 வரை எட்டியது. இதேபோல் மேலும் பல மாநிலங்களில் வெங்காயத்தின் விலை உயா்ந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதமும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததுடன், அதன் விலை உயா்வைத் தடுக்கும் நோக்கில் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பிறகு மீண்டும் கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு படிப்படியாக விலக்கியது. ஆண்டுதோறும் உள்நாட்டில் வெங்காயம் விலை அதிகரிக்கும்போது அதனை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments