முகப்பு
இந்தியா

ஹைதராபாத்தில் பெண்கள் புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண்!

ஹைதராபாத்தில் பெண்கள் புகார் அளிக்க காவல் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. மாறாக பெண்களுக்கென பிரத்யேகமாக ஒரு வாட்ஸ் ஆப் எண்ணை அறிவித்துள்ளது ஹைதராபாத் நகர காவல்துறை. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
கோப்புப்படம்
பகிர்:

ஹைதராபாத்தில் பெண்கள் புகார் அளிக்க காவல் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. மாறாக பெண்களுக்கென பிரத்யேகமாக ஒரு வாட்ஸ் ஆப் எண்ணை அறிவித்துள்ளது ஹைதராபாத் நகர காவல்துறை. 

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். குடும்பத்தினரின் தொந்தரவு, வேலை செய்யும் இடத்தில், பயணங்களில் என பல பிரச்னைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்களில் பலர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை. இதனால் பெண்களுக்காக மகளிர் காவல் நிலையங்கள், பிரத்யேக உதவி எண்கள் என பல இருக்கின்றன. 

இந்நிலையில் இதையும்விட எளிதாக பெண்கள் காவல்நிலையங்களை தொடர்புகொள்ளும்பொருட்டு வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இடையூறு இல்லாத காவல்துறை சேவையை உறுதி செய்யவும், பெண்களின் பாதுகாப்புகாகவும் ஒரு புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் காவல்துறையின் இந்த பைலட் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. 

பெண்கள் பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி. பி.சுமதி, 'பல வழக்குகளில் குற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான முறைகேடுகள் புகாரளிக்கப்படுவதில்லை. மேலும் அனைத்து பெண்களும் புகாரளிக்க காவல் நிலையங்களுக்கு வர முடியாது. பல குடும்பங்களில் வீட்டுக் கட்டுப்பாடுகள் உள்ளன. இல்லையெனில் எங்கு சென்று புகார் அளிப்பது என்ற குழப்பம் ஏற்படும். எனவே, வாட்ஸ்ஆப் மூலமாக புகாரளிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது' என்றார். 

ஈவ்-டீசிங், மொபைல் போனில் மிரட்டல், குடும்பத்தினருடன் பிரச்னை என பெண்கள் எம்மாதிரியான புகார்களையும் அளிக்க முடியும். வாட்ஸ் ஆப்பில் என்ன பிரச்னை என்பதை செய்தி வடிவிலோ, ஆடியோ அல்லது விடியோ வடிவிலோ அனுப்பலாம். பின்னர் காவல்துறையினர் ஆய்வு செய்து புகார் பதிவு செய்து விசாரிப்பார். புகார் பதிவு செய்த பின்னர் சம்மந்தப்பட்ட நபருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த முயற்சி மூலம் பெண்களுக்கு ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →