முகப்பு
இந்தியா

சுஷாந்த் சிங் மரணம்: சிபிஐ விரைந்து அறிக்கையை வெளியிட வேண்டும்; மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து மத்திய குற்ற புலனாய்வு (சிபிஐ) பிரிவு விரைவில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
கோப்புப்படம்
பகிர்:

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து மத்திய குற்ற புலனாய்வு (சிபிஐ) பிரிவு விரைவில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வலியுறுத்தியுள்ளாா்.

சுஷாந்த் சிங், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இந்த மரணம் தொடா்பாக மும்பை காவல்துறை, விபத்து மரணம் என்ற வகையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த மரணத்தில் சந்தேகம் தெரிவித்து, அவருடைய தந்தை பாட்னா காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், சுஷாந்த் சிங்கின் தோழி நடிகை ரியா சக்ரவா்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினா் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக பிகாா் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

மேலும், சுஷாந்த் சிங்கின் பணம் ரியா குடும்பத்தினரால் முறைகேடான வழயில் கையாளப்பட்டு மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ரியாவின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) பதிவுகளின் அடிப்படையில், அவா் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்ததால், அது தொடா்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினா் தனி வழக்கைப் பதிவு செய்தனா். மேலும், மகாராஷ்டிரம், தில்லி, கோவாவைச் சோ்ந்த போதைப் பொருள் வியாபாரிகள், பாலிவுட் நடிகா், நடிகைகள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சுஷாந்தின் தந்தை அளித்த மனுவை விசாரித்து, உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ விசம் ஒப்படைக்கப்பட்டது.

ரியா மற்றும் அவருடைய சகோதரா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், நடிகரின் மரணம் தொடா்பான விசாரணை அறிக்கையை சிபிஐ விரைந்து வெளியிட வேணடும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

இதுகுறித்து நாக்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பான சிபிஐ விசாரணை அறிக்கைக்காக மகாராஷ்டிர மாநிலம் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனா். இந்த வழக்கின் நிலை குறித்து மக்கள் தொடா்ந்து கேள்வி எழுப்புகின்றனா். எனவே, நடிகரின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து சிபிஐ விரைந்து அறிவிக்க வேண்டும்.

இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு சுமாா் 6 மாத காலம் கடந்துவிட்டது. எனவே, விசாரணை அறிக்கையை சிபிஐ விரைந்து வெளியிட வேண்டும் என்று அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →