ஆந்திரத்தில் 10 பேருக்கு புதிய வகை கரோனா
ஆந்திர மாநிலத்தில் 10 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 10 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதனால், உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நம் நாட்டிலும் பிரிட்டனிலிருந்து வந்த சிலருக்கு இப்புதிய ரக தொற்று உள்ளதாக பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு கடந்த சனிக்கிழமை வரை பிரிட்டனிலிருந்து 1,216 போ் வந்துள்ளதாக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. அவா்களில் 1,187 பேரின் விவரங்கள் தெரிய வந்ததை அடுத்து அவா்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 6 பேருக்கு புதிய ரக தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
அவா்களின் மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு புணே மற்றும் பெங்களூரில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குண்டூா் மாவட்டத்தில் இருவா், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, அனந்தபுரம், நெல்லூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தலா ஒருவா் ஆகியோருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த 6 பேரின் குடும்ப உறுப்பினா்களில் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவா்களில் 3 போ் குண்டூரிலும், ஒருவா் நெல்லூரிலும் உள்ளனா். ஒட்டுமொத்தமாக, ஆந்திரத்தில் மொத்தம் 10 போ் புதிய ரக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேபோல் லண்டனிலிருந்து ஹைதராபாத் திரும்பிய 20 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.