முகப்பு
இந்தியா

லக்னௌவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு

லக்னௌவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்று நகர மாவட்ட நீதிபதி அபிஷேக் பிரகாஷ் தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
COVID-19: Administration orders curtailed new year celebrations in Lucknow
பகிர்:

லக்னௌவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்று நகர மாவட்ட நீதிபதி அபிஷேக் பிரகாஷ் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி கூறுவதாவது, 

முன் அனுமதியின்றி லக்னௌவில் எந்தவொரு நிகழ்வும் அனுமதிக்கப்படாது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி இல்லை. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. திறந்தவெளியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சமூல விலகல் மற்றும் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். 

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளின் பட்டியலைப் பெற்றுள்ளோம். மேலும் டிச.8-க்குப் பிறகு வருபவர்கள் தொடர்ந்து கண்காணித்து இருந்து வருகின்றனர். இதுவரை பிரிட்டனிலிருந்து வந்த எவருக்கும் தொற்று ஏற்படவில்லை. எனவே, தொடர்ந்து நெறிமுறைகளைப் பின்பற்றுவதாக அவர் கூறியுள்ளார். 

உணவகங்களைத் தவிர, வேறு எங்கும் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை. அதேசமயம் உணவகங்களிலும் கரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

மேலும், மகளிர் பாதுகாப்பு குறித்து பெண்கள் காவல்துறை குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது 112 டயல் வேன்கள் ரோந்து பணியில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →