‘பொய் பேசி வருகிறார் பிரதமர் மோடி’: ராகுல்காந்தி விமர்சனம்
பிரதமர் மோடி நீண்ட காலமாக பேசி வரும் பொய்களின் காரணமாக அவரின் வாக்குறுதிகளை விவசாயிகள் நம்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நீண்ட காலமாக பேசி வரும் பொய்களின் காரணமாக அவரின் வாக்குறுதிகளை விவசாயிகள் நம்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 35 நாள்களாக போராடி வருகின்றனர். இதுவரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் புதன்கிழமை 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தனது சுட்டுரைப் பதிவில், "ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி புதிய வேலை வாய்ப்புகள், கருப்புப் பண ஒழிப்பிற்கு எனக்கு 50 நாள்கள் கொடுங்கள் எனக் கேட்டது, 21 நாள்களில் கரோனாவிற்கு எதிரானப் போரில் வெற்றி பெறலாம் எனத் தெரிவித்தது, இந்திய எல்லைப் பகுதியில் யாரும் ஊடுருவவில்லை என நீண்ட காலமாக மோடி பொய் பேசி வருவதால் விவசாயிகள் அவரை நம்பவில்லை" என விமர்சனம் தெரிவித்துள்ளார்.