பஞ்சாபில் ஜனவரி 1 முதல் இரவு நேர பொதுமுடக்கம் ரத்து
கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பஞ்சாபில் 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பஞ்சாபில் 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
கரோனா தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 1 முதல் 31 வரை இரவுநேரப் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்ததையடுத்து மாநிலத்தில் 2021 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இரவுநேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து நகரங்களிலும் நகரங்களிலும் இரவு நேரப் பொதுமுடக்க உத்தரவு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மேலும் 100 மற்றும் 250 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்த கூட்டங்களுக்கு 200 மற்றும் 500 பேர் வரை தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கோவிட் -19 நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.