முகப்பு
இந்தியா

கேரளத்தில் பஞ்சாயத்துத் தலைவரான துப்புரவு பணியாளர்

கேரளத்தில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் உள்ளாட்சி தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கிராம பஞ்சாயத்து தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கேரளத்தில் பஞ்சாயத்துத் தலைவரான துப்புரவு பணியாளர்
பகிர்:

கேரளத்தில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் உள்ளாட்சி தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் கிராம பஞ்சாயத்து தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் தலாவூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவல்லி.  கடந்த 10 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் அவர் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

மதிய நேர உணவு இடைவேளை வரை பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகவும், பிறகு உள்ளூர் அரசு அலுவலகத்தில் துப்புரவு பணிகளையும் மேற்கொண்டுவந்தார்.

இதனிடையே கேரளத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தலாவூர் பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி ஜனநாய முன்னணி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இடதுசாரி ஜனநாய முன்னணி அவரை பஞ்சாயத்துத் தலைவராகவும் தேர்வு செய்துள்ளது. தலாவூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 13 உறுப்பினர்களை கொண்ட மண்டல பஞ்சாயத்திற்கு அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய ஆனந்தவல்லி, பஞ்சாயத்து தலைவராக கட்சி என்னை தேர்வு செய்யும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தவருக்கு, அந்த பஞாயத்து நிர்வாகத்தின் தலைவராக பணிபுரியும் வாய்ப்பை இடதுசாரி ஜனநாயக முன்னணி வழங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →