நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைவோா் விகிதம் 95.99 சதவீதமாக அதிகரிப்பு
நாட்டின் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் 95.99 சதவீதத்தை எட்டியுள்ளது.
நாட்டின் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் 95.99 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தொற்றில் இருந்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 98,34,141 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.56 சதவீதமாகும்.
தற்போதைய சூழ்நிலையில் 2,62,272 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 10-ஆவது நாளாக கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 20 ஆயிரம் 881 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையை ஒரு கோடி இரண்டு லட்சத்து 66 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, இந்தியாவின் தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது, இது உலகளவில் மிகக் குறைவான ஒன்றாகும். கடந்த 24 மணி நேரத்தில், 286 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளன.இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.
கரோனா தொற்று பரிசோதனை அடிப்படையில் நாடு மற்றொரு மைல்கல்லை தாண்டியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,20,281 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் டிசம்பா் 29-ஆம் தேதி வரை 17,09,22,030 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.