முகப்பு
இந்தியா

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு தொற்று; 299 பேர் பலி 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 21,882 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 26,139 போ் விடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் இதுவரை 98,60,280 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். உலகிலேயே இந்தியாவில்தான் கரோனாவில் இருந்து மீண்டோா் சதவீதம் அதிகமாக உள்ளது.

நாட்டில் வியாழக்கிழமை காலை வரை 1,02,66,674 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 95.99 சதவீதம் போ் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டனா்.

இப்போதைய சூழ்நிலையில் 2,57,658 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பெறுவோர் 2.56 சதவீதமாக உள்ளது. தொடா்ந்து 10-ஆவது நாளாக கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 299 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,48,738 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 30-ஆம் தேதி வரை 17,20,49,274 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 11,27,244 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 

முழு கட்டுரையைப் படிக்க →