முகப்பு
இந்தியா

கால்வாயில் விழுந்து கார் விபத்து: 2 பேர் பலி, 3 பேர் காயம்

 ஒடிசாவின் பர்லகேமுண்டிக்கு அருகிலுள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விசாகப்பட்டினம் செல்லும் வழியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2020 at 4:27 PM
பகிர்:

நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஹிரமண்டலத்தில் கோட்டா பேரேஜில் சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், அவர்கள் பயணித்த கார் கால்வாயில் விழுந்தது. ஒடிசாவின் பர்லகேமுண்டிக்கு அருகிலுள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விசாகப்பட்டினம் செல்லும் வழியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இறந்தவர்கள் காக்கினாடாவில் வசிக்கும் பவன் (32), கம்மத்தில் வசிக்கும் பி சந்திரா (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஹிராமண்டலம் போலீஸார் தெரிவித்தனர். காக்கினாடாவில் வசிக்கும் எஸ்.பிரவீன், விஜயநகரத்தைச் சேர்ந்த பாபிலியில் வசிக்கும் மகேஸ்வர ராவ், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மொகல்தூரில் வசிக்கும் பி.வி.கிரி பிரசாத் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை ஒடிசாவின் பர்லகேமுண்டிக்கு அருகிலுள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு, காயமடைந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேரும் ஒரு காரில் விசாகப்பட்டினம் திரும்பினர். கரடுமுரடான குறுகிய சாலையில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், கோட்டா பேரேஜ் அருகே வம்சாதாரா ஆற்றின் இடது கால்வாயில் கார் விழுந்தது.

Advertisement

பான் மற்றும் சந்திரா ஆகியோர் காரில் சிக்கி மூச்சுத் திணறலால் இறந்ததாகவும், மற்ற மூவரும் பலத்த காயம் அடைந்தனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக படபட்னம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

ஹிராமண்டலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.