குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்கள்: மத்திய பாஜக அமைச்சர் பேச்சு
குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக எதிர்ப்பு பாஜக எம்.பி முகம்மது அப்பாஸ் நக்வி கூறுகிறார்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகிறார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக மற்றும் மாணவ அமைப்புகள் சார்பில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெறுகின்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்தை தடுக்க இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Advertisement
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, 'குடியுரிமைச் சட்டத்தை வில்லனாக்கும் முயற்சியில் அதற்கு எதிராக போராடுபவர்களே இறுதியில் வில்லன் ஆகிறார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், பொய்களின் புதர்களுக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு காலம் சத்திய மலையை மறைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், 'குடியுரிமைச் சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என குடியரசுத் தலைவரே நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டம் இந்திய குடிமக்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இச்சட்டத்தினை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு செய்யும் விரோதம்' என்று பேசியுள்ளார்.