இந்தியா

கடும் மூடுபனி காரணமாக தில்லியில் 10 ரயில்கள் தாமதம் 

 தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக 10 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 

DIN

புது தில்லி:  தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக 10 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 

வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவி வருகின்றது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் 3 மணி 15 நிமிடங்கள் தாமதமானது. அதைத் தொடர்ந்து பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டது. 

திப்ருகார்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமானது, பாகல்பூர்-ஆனந்த் விஹார் கரிப் ராத் மற்றும் காசிப்பூர்-ஆனந்த் விஹார் டெர்மினல் எக்ஸ்பிரஸ் ஆகியவை 2.30 மணி நேரம் தாமதமாக இயங்கின. 

சென்னை-புது தில்லி ஜிடி எக்ஸ்பிரஸ் 2.15 மணி நேரம் தாமதமானது, ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டதால் நேற்றும் 10 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT