இந்தியா

தில்லியில் பெண் காவல் உதவி ஆய்வாளரைக் கொன்ற ஆண் உதவி ஆய்வாளர் தற்கொலை

DIN

பேரவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் தில்லியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பத்பர்கஞ்ச் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்ட ப்ரீத்தி அஹல்வாத், சக ஆண் உதவி ஆய்வாளர் தீபன்ஷு ரதியால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ரோகினி கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:30 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது ப்ரீத்தி தலையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. கொலை நடந்த இடத்தில் நிபுணர் குழு ஆய்வு நடத்தியது. இந்த நிலையில், ப்ரீத்தியை, தீபன்ஷு சுட்டது சிசிடிவி காட்சிகளில் கண்டறியப்பட்டது. இதனிடையே தீபன்ஷு சோனேபட் பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் இருவரும் ஒரே அணியில் உதவி ஆய்வாளர் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

இந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான காரணத்தை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தில்லிக்கு பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் நடைபெற்றுள்ள இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT