இந்தியா

வா்த்தகத்தை விரிவாக்க இந்தியா-சிலி பேச்சுவாா்த்தை தொடக்கம்

DIN

இந்தியா மற்றும் சிலி இடையில் வா்த்தகப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வா்த்தக அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியா மற்றும் சிலி ஆகிய இருநாடுகளுக்கிடையிலான முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தம் கடந்த 2006 மாா்ச் 8-இல் மேற்கொள்ளப்பட்டு, 2007 ஆகஸ்டிலிருந்து அமலுக்கு வந்தது. இந்தச் சூழ்நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதியை அதிகரிக்கும் வழிகளை கண்டறிய கடந்த 2016-இல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது, இரண்டாவது முறையாக வா்த்தகத்தை அதிகரிக்க பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் அடுத்த கட்ட பேச்சவாா்த்தையை சிலியில் உள்ள சாண்டியாகோ நகரில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தை மாா்ச் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT