இந்தியா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக  ஜாமியா பல்கலை மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு

DIN


குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் உள்ள ஜாமியா பல்கலை மாணவர்கள் பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவே, தில்லி காவல்துறை அனுமதி  அளித்துள்ள நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல ஜாமியா பல்கலை மாணவர்கள் முயற்சி செய்ததால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஓக்லா அருகே ஹோலி ஃபேமிலி மருத்துவமனை அருகே தில்லி காவல்துறையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT