முகப்பு
இந்தியா

பஞ்சாபில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

பஞ்சாப், மோஹாவில் கடும் மூடுபனி காரணமாக கார் விபத்துக்குள்ளானதில்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
பகிர்:

சண்டிகர்: பஞ்சாப், மோஹாவில் கடும் மூடுபனி காரணமாக கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பஞ்சாப் மாநிலம் மோஹா-ஹுசைனிவாலா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக அடர்ந்த மூடுபனி நிலவி வருகின்றது. இந்நிலையில், தில்லியிலிருந்து மோஹா நகரத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த கார் மூடுபனி காரணமாக காட்சித்திறன் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், ராஜீவ் மிட்டல் (48), அவரது மனைவி மஞ்சு மிட்டல் (48), மகன் சுபம் மிட்டல் (18) மற்றும் மகள் சுனிதி மிட்டல் (21) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மூடுபனி காரணமாக, இந்த விபத்து நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். டெல்லி உள்பட வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவி வருகின்றது. இதனால் சாலைகளில் குறைவான காட்சித் திறன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.