ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி
பஞ்சாபில் மோகா மாவட்டத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் திடீர் விபத்தால் பலியாகினர்.
பஞ்சாபில் மோகா மாவட்டத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் திடீர் விபத்தால் பலியாகினர்.
கடுமையான மூடுபனி காரணமாக சாலை சரியாகத் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தில்லியிலிருந்து மோகா நகரத்திற்கு திரும்பி வந்த இவர்கள், ராஜீவ் மிட்டல் (48), அவரது மனைவி மஞ்சு மிட்டல் (48), மகன் சுபம் மிட்டல் (18) மற்றும் மகள் சுனிதி மிட்டல் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மெஹ்னா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.